நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக 112,711 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவாகிய சுந்தரலிங்க பிரதீப்.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராகவும் பதவி ஏற்று கொண்டுள்ள நிலையில், மேலும் மக்களுக்கான பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு ஒரு உயரிய அங்கீகாரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா வழங்கியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட கொடகவெல பிரதேச செயலக பிரிவின் கொடகவெல, ஒபநாயக்க,
வெலிகபொல பிரதேசங்களை உள்ளடக்கி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ் நியமனத்தை பெற்றுக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான நியமன கடிதம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டதோடு, நியமனத்தை பெற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் "கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினர் மக்கள் சேவையினை "மாற்றான் தாய் மனப்பான்மையோடு" சேவைகளை மேற்கொண்டனர்.
இனிவரும் காலங்களில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளின் அடிப்படையில் .
தேசிய அபிவிருத்தி திட்டங்களுக்கு ஏற்புடையதாக பிரதேச மட்டத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்.
சகல அபிவிருத்தி பணிகளையும் ஒருங்கிணைப்பு செய்வதோடு அவற்றை பின்தொடர்ந்து.
நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிவகைகளை மேற்கொள்வதோடு சகல மக்களுக்கும் இன, மத ,மொழி , பிரதேச வாதகங்கள் கடந்து மேற்கொள்வேன்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக : பிரதி அமைச்சர் பிரதீப் நியமனம் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக 112,711 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவாகிய சுந்தரலிங்க பிரதீப்.பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராகவும் பதவி ஏற்று கொண்டுள்ள நிலையில், மேலும் மக்களுக்கான பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு ஒரு உயரிய அங்கீகாரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா வழங்கியுள்ளார். இரத்தினபுரி மாவட்ட கொடகவெல பிரதேச செயலக பிரிவின் கொடகவெல, ஒபநாயக்க,வெலிகபொல பிரதேசங்களை உள்ளடக்கி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ் நியமனத்தை பெற்றுக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதற்கான நியமன கடிதம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டதோடு, நியமனத்தை பெற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் "கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினர் மக்கள் சேவையினை "மாற்றான் தாய் மனப்பான்மையோடு" சேவைகளை மேற்கொண்டனர். இனிவரும் காலங்களில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளின் அடிப்படையில் .தேசிய அபிவிருத்தி திட்டங்களுக்கு ஏற்புடையதாக பிரதேச மட்டத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும். சகல அபிவிருத்தி பணிகளையும் ஒருங்கிணைப்பு செய்வதோடு அவற்றை பின்தொடர்ந்து. நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிவகைகளை மேற்கொள்வதோடு சகல மக்களுக்கும் இன, மத ,மொழி , பிரதேச வாதகங்கள் கடந்து மேற்கொள்வேன்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.