• May 06 2024

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போலிக் அமிலம் மருந்துக்கு தட்டுப்பாடா..? வெளியான தகவல் samugammedia

Chithra / Nov 29th 2023, 9:02 am
image

Advertisement


கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போலிக் அமிலம் என்ற மருந்துக்கு இதுவரையில் தட்டுப்பாடு பதிவாகவில்லை என அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பல மாவட்டங்களில் ஆராயப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவி தேவிக்கா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போலிக் அமிலம் உள்ளிட்ட விற்றமின் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், சகல மருந்தகங்களிலும் போலிக் அமிலம் என்ற மருந்து போதிய அளவில் கையிருப்பில் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் தலைவி தேவிக்கா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.


கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போலிக் அமிலம் மருந்துக்கு தட்டுப்பாடா. வெளியான தகவல் samugammedia கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போலிக் அமிலம் என்ற மருந்துக்கு இதுவரையில் தட்டுப்பாடு பதிவாகவில்லை என அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் பல மாவட்டங்களில் ஆராயப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவி தேவிக்கா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போலிக் அமிலம் உள்ளிட்ட விற்றமின் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்தநிலையில், சகல மருந்தகங்களிலும் போலிக் அமிலம் என்ற மருந்து போதிய அளவில் கையிருப்பில் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் தலைவி தேவிக்கா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement