முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை போதைப்பொருள் பாவித்த நிலையில் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக, நடமாடும் ஆய்வக வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த தேசிய போக்குவரத்து மருத்துவ அந்த நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் யு. சி. பி. பெரேரா,
இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் மாதங்களில் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் குறிப்பிட்டார்.
முன்னோடித் திட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 57 பயணிகள் பேருந்து சாரதிகள் இந்த நடமாடும் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 10 சாரதிகள் பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இத்தகைய திடீர் சோதனைகள் இனிவரும் காலங்களில் தீவிரப்படுத்தப்படவுள்ளன.
போதை சாரதிகளைக் கண்டறிய நடமாடும் ஆய்வகங்கள் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை போதைப்பொருள் பாவித்த நிலையில் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக, நடமாடும் ஆய்வக வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த தேசிய போக்குவரத்து மருத்துவ அந்த நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் யு. சி. பி. பெரேரா,இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் மாதங்களில் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் குறிப்பிட்டார்.முன்னோடித் திட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 57 பயணிகள் பேருந்து சாரதிகள் இந்த நடமாடும் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.அவர்களில் 10 சாரதிகள் பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இத்தகைய திடீர் சோதனைகள் இனிவரும் காலங்களில் தீவிரப்படுத்தப்படவுள்ளன.