• May 06 2024

மதம்தான் எங்களின் மூச்சு..! கிளிநொச்சியில் குண்டுகள் வெடிக்கும்- மர்ம கடிதத்தால் பரபரப்பு.!samugammedia

Sharmi / May 27th 2023, 10:26 am
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டு வெளியிடப்பட்ட கடிதமொன்றை கண்டுபிடித்துள்ளதாக கிளிநொச்சி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த இந்த எச்சரிக்கை கடிதத்தை மீட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடிதத்தை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு பெண்கள் அடையாளம் கண்டுள்ள பொலிசார் அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மதம்தான் எங்களின் மூச்சு. நாளை பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டுள்ளோம். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள் கொலை செய்வார்கள்.

இந்த கடிதம் தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் நிச்சயம் கொன்று விடுவோம் என்ற வசனங்கள் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடிதத்தில் இரண்டு கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதம்தான் எங்களின் மூச்சு. கிளிநொச்சியில் குண்டுகள் வெடிக்கும்- மர்ம கடிதத்தால் பரபரப்பு.samugammedia கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டு வெளியிடப்பட்ட கடிதமொன்றை கண்டுபிடித்துள்ளதாக கிளிநொச்சி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கிளிநொச்சி தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த இந்த எச்சரிக்கை கடிதத்தை மீட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.கடிதத்தை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு பெண்கள் அடையாளம் கண்டுள்ள பொலிசார் அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக மதம்தான் எங்களின் மூச்சு. நாளை பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டுள்ளோம். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள் கொலை செய்வார்கள். இந்த கடிதம் தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் நிச்சயம் கொன்று விடுவோம் என்ற வசனங்கள் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடிதத்தில் இரண்டு கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement