• May 06 2024

முஸ்லீம் மக்களுக்கு இதுவரை எந்த அரசாங்கமும் நிரந்தர தீர்வினை வழங்கவில்லை...!ரிஷாட் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Nov 10th 2023, 8:49 pm
image

Advertisement

33 வருடங்களாக பல இன்னல்களை அனுபவித்து வரும் முஸ்லீம் மக்களுக்கு இதுவரை எந்த அரசாங்கமும் நிரந்தர தீர்வினை வழங்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.  

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1990 முதல் இப்போது வரை முஸ்லீம் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதோடு  பலவந்தமாக தமிழர் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டு 33 ஆண்டுகளாக இதுவரை எந்த தீர்வும் இன்றி புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

முஸ்லீம் மக்களுக்காக  நிரந்தர தீர்வினை வழங்காத காரணத்தினால் இந்த அரசாங்கத்துக்கு நான் ஒரு பிரேரணையை முன்வைக்கிறேன் அத்துடன் தமிழர் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் கஸ்டப்பட்டு கடல் மார்க்கமாக புத்தளத்தில் குடியேறினர்.

அத்துடன் பல இன்னல்கள் நிறைந்த வாழ்க்கையில் நானும் 18 வயது இளைஞனாக இருக்கும் போது நேரில் பார்த்து இருக்கிறேன். இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்குள் வந்து உலக வங்கியின் 32மில்லியன் டொலர் பணம் மூலம் புத்தளத்தில் வீடுகளை கட்டி கொடுத்து பல வசதிகளை செய்து கொடுத்தாலும் அவர்கள் இன்னமும் மீள குடியேற முடியாமல் உள்ளனர். எனவே புத்தள மாவட்டத்தில் அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும்.

2009 க்கு  பிறகு யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் மக்கள் அரச அதிகாரிகளால் கவனத்தில் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கான தனிப்பட்ட பிரதேசம் இருந்தும் அவர்கள் எந்த விதமான ஆக்க பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.

நான் அமைச்சராக இருந்த போது தமிழ் மக்களுக்கு காணி  வழங்கி  உதவி செய்தேன். ஆனால் முல்லைத்தீவு முஸ்லீம் மக்களுக்கு காணி வழங்க வேண்டாம் என்று தமிழ் அரசியல்வாதிகள் தடுத்தனர். எனது சேவையை  அங்கு செய்ய முடியவில்லை.

அதேபோல ஏனைய தமிழ் பிரதேத்தில் வாழும் முஸ்லீம் மக்களுக்கும் எந்த அரசாங்கம் தீர்வினை  தரவில்லை. நானும் முஸ்லீம் நாடுகளின் உதவியோடு அவர்களுக்கு அடிப்படை வசதியை வழங்கினேன். அத்துடன் நான் அதிகாரம் இல்லாத இக்காலப்பகுதியில் அரச அதிகாரிகள் முஸ்லீம் மக்களுக்கு அசெளகரியங்களை விளைவிக்கின்றனர்.

முசலி பகுதியில் காணி பெறுவதில் முஸ்லிம்கள் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். முஸ்லிம் மக்களுக்கு தெரிவினை வழங்குவோம் என்று அரசாங்கம் ஜெனிவாவில் தெரிவித்த போதும் அது முழுமையாக செய்யப்படவில்லை. 

கோட்டபாய அரசாங்கத்தில் முஸ்லீம் மக்களுக்கு எந்த அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. நான் செய்து கொடுத்த  அடிப்படை வசதிகள் எல்லாம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லீம் மக்களை சர்வதேச நாடுகள் எட்டிப்பார்ப்பது கூட  இல்லை. எனவே பட்ஜெட்டில் முஸ்லீம் மக்களுக்கு விசேட வேலை திட்டத்தை  முன் வையுங்கள் அத்துடன் நிரந்தர தீர்வை வழங்குங்கள் என்று ரிஸார்ட் எம்.பி மேலும் தெரிவித்தார்

முஸ்லீம் மக்களுக்கு இதுவரை எந்த அரசாங்கமும் நிரந்தர தீர்வினை வழங்கவில்லை.ரிஷாட் குற்றச்சாட்டு.samugammedia 33 வருடங்களாக பல இன்னல்களை அனுபவித்து வரும் முஸ்லீம் மக்களுக்கு இதுவரை எந்த அரசாங்கமும் நிரந்தர தீர்வினை வழங்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,1990 முதல் இப்போது வரை முஸ்லீம் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதோடு  பலவந்தமாக தமிழர் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டு 33 ஆண்டுகளாக இதுவரை எந்த தீர்வும் இன்றி புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றனர்.முஸ்லீம் மக்களுக்காக  நிரந்தர தீர்வினை வழங்காத காரணத்தினால் இந்த அரசாங்கத்துக்கு நான் ஒரு பிரேரணையை முன்வைக்கிறேன் அத்துடன் தமிழர் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் கஸ்டப்பட்டு கடல் மார்க்கமாக புத்தளத்தில் குடியேறினர். அத்துடன் பல இன்னல்கள் நிறைந்த வாழ்க்கையில் நானும் 18 வயது இளைஞனாக இருக்கும் போது நேரில் பார்த்து இருக்கிறேன். இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்குள் வந்து உலக வங்கியின் 32மில்லியன் டொலர் பணம் மூலம் புத்தளத்தில் வீடுகளை கட்டி கொடுத்து பல வசதிகளை செய்து கொடுத்தாலும் அவர்கள் இன்னமும் மீள குடியேற முடியாமல் உள்ளனர். எனவே புத்தள மாவட்டத்தில் அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும்.2009 க்கு  பிறகு யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் மக்கள் அரச அதிகாரிகளால் கவனத்தில் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கான தனிப்பட்ட பிரதேசம் இருந்தும் அவர்கள் எந்த விதமான ஆக்க பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. நான் அமைச்சராக இருந்த போது தமிழ் மக்களுக்கு காணி  வழங்கி  உதவி செய்தேன். ஆனால் முல்லைத்தீவு முஸ்லீம் மக்களுக்கு காணி வழங்க வேண்டாம் என்று தமிழ் அரசியல்வாதிகள் தடுத்தனர். எனது சேவையை  அங்கு செய்ய முடியவில்லை. அதேபோல ஏனைய தமிழ் பிரதேத்தில் வாழும் முஸ்லீம் மக்களுக்கும் எந்த அரசாங்கம் தீர்வினை  தரவில்லை. நானும் முஸ்லீம் நாடுகளின் உதவியோடு அவர்களுக்கு அடிப்படை வசதியை வழங்கினேன். அத்துடன் நான் அதிகாரம் இல்லாத இக்காலப்பகுதியில் அரச அதிகாரிகள் முஸ்லீம் மக்களுக்கு அசெளகரியங்களை விளைவிக்கின்றனர். முசலி பகுதியில் காணி பெறுவதில் முஸ்லிம்கள் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். முஸ்லிம் மக்களுக்கு தெரிவினை வழங்குவோம் என்று அரசாங்கம் ஜெனிவாவில் தெரிவித்த போதும் அது முழுமையாக செய்யப்படவில்லை. கோட்டபாய அரசாங்கத்தில் முஸ்லீம் மக்களுக்கு எந்த அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. நான் செய்து கொடுத்த  அடிப்படை வசதிகள் எல்லாம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லீம் மக்களை சர்வதேச நாடுகள் எட்டிப்பார்ப்பது கூட  இல்லை. எனவே பட்ஜெட்டில் முஸ்லீம் மக்களுக்கு விசேட வேலை திட்டத்தை  முன் வையுங்கள் அத்துடன் நிரந்தர தீர்வை வழங்குங்கள் என்று ரிஸார்ட் எம்.பி மேலும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement