• May 07 2024

அடிப்பதற்கும் இடிப்பதற்கும் படகு தருவதாக தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் இன்று கடலை தாரைவார்த்துள்ளார்!SamugamMedia

Sharmi / Mar 1st 2023, 2:38 pm
image

Advertisement

மீன்பிடி அமைச்சராக இரண்டு தடவைகள் பதவி வகித்த டக்ளஸ் தேவானந்தா  சொல்லித் தந்த, தாரக மந்திரத்தை யாழ் மாவட்ட மீனவர் சம்மேளன இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பில் சுப்பிரமணியம் இதனை வெளியிட்டிருந்தார்.

வடக்கு மீனவர்களுக்கு துணிவு இருந்தால் இந்திய மீனவர்களை பிடித்து வருமாறு முதலாவதாக அமைச்சர் கூறியிருந்ததாகவும் அதனையும் பிடித்து கொடுத்திருந்தாக சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் இந்திய மீனவர்களை அத்து விட்டு வருமாறு தெரிவித்ததாகவும் இதனை தொடர்ந்து வடக்கு மீனவர்களும் அடித்திருந்ததாகவும் அடிவேண்டியிருந்தாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு எதிராக வடக்கு மீனவர்களை தூண்டி விட்டிருந்த அமைச்சர் அண்மையில் அடிப்பதற்கு ஒரு படகு இடிப்பதற்கு ஒரு படகு தருவதாக குறிப்பிட்டிருந்தாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கூறி வந்த அமைச்சர் இன்று தலைகீழாக மாறி தமிழக நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு இந்த கடலை தாரைவார்த்துக் கொடுக்கும் நிலைக்கு தற்போது வந்துள்ளதாக சுப்பிரமணியம் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது கச்சதீவிலே இந்திய இலங்கை மீனவர்களுக்கான பேச்சுவார்தை என்ற போர்வையில் மீனவர்களை அமைச்சர் அழைத்துச் செல்வதாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் கடலுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றும் சுப்பிரமணியம் மேலும் தெரிவித்துள்ளார்.

அடிப்பதற்கும் இடிப்பதற்கும் படகு தருவதாக தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் இன்று கடலை தாரைவார்த்துள்ளார்SamugamMedia மீன்பிடி அமைச்சராக இரண்டு தடவைகள் பதவி வகித்த டக்ளஸ் தேவானந்தா  சொல்லித் தந்த, தாரக மந்திரத்தை யாழ் மாவட்ட மீனவர் சம்மேளன இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பில் சுப்பிரமணியம் இதனை வெளியிட்டிருந்தார்.வடக்கு மீனவர்களுக்கு துணிவு இருந்தால் இந்திய மீனவர்களை பிடித்து வருமாறு முதலாவதாக அமைச்சர் கூறியிருந்ததாகவும் அதனையும் பிடித்து கொடுத்திருந்தாக சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.அதன் பின்னர் இந்திய மீனவர்களை அத்து விட்டு வருமாறு தெரிவித்ததாகவும் இதனை தொடர்ந்து வடக்கு மீனவர்களும் அடித்திருந்ததாகவும் அடிவேண்டியிருந்தாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.தமிழக மீனவர்களுக்கு எதிராக வடக்கு மீனவர்களை தூண்டி விட்டிருந்த அமைச்சர் அண்மையில் அடிப்பதற்கு ஒரு படகு இடிப்பதற்கு ஒரு படகு தருவதாக குறிப்பிட்டிருந்தாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு கூறி வந்த அமைச்சர் இன்று தலைகீழாக மாறி தமிழக நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு இந்த கடலை தாரைவார்த்துக் கொடுக்கும் நிலைக்கு தற்போது வந்துள்ளதாக சுப்பிரமணியம் குற்றம் சுமத்தியுள்ளார்.தற்போது கச்சதீவிலே இந்திய இலங்கை மீனவர்களுக்கான பேச்சுவார்தை என்ற போர்வையில் மீனவர்களை அமைச்சர் அழைத்துச் செல்வதாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டிருந்தார்.இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் கடலுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றும் சுப்பிரமணியம் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement