• May 07 2024

அடுத்தடுத்து மர்மமான முறையில் காணாமல் போகும் உயர் அதிகாரிகள்! samugammedia

Tamil nila / Sep 22nd 2023, 7:53 pm
image

Advertisement

ஊழல் விசாரணையில் உள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு காணாமல் போயிருந்த நிலையில், ஜனாதிபதி சி ஜின் பிங்கின் பிரதிநிதிகள் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆணைக்குழுவால் அதிகாரி ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் என்பதற்கான முதல் அறிகுறியாக இது  பெரும்பாலும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அந்த அதிகாரி இராணுவ அதிகாரியாக இருந்தால், மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆணைக்குழுவால்தான் ஒழுங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ அண்மைகாலமாக பொதுவெளியில் தென்படாதுள்ளார்.

ஜெனரல் லி கடந்த இரண்டு வாரங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. முக்கியமான பல கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

சீனாவில் சமீபமாக பல உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் லி ஷாங்ஃபூவையும் பல நாட்களாக பொதுவெளியில் காணப்படுவதில்லை.

லி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக 'தி லால் ஸ்ட்ரீட் ஜர்னல்' கடந்த வெள்ளியன்று செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு அதிகாரியை காணவில்லையென சீனாவில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து மர்மமான முறையில் காணாமல் போகும் உயர் அதிகாரிகள் samugammedia ஊழல் விசாரணையில் உள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு காணாமல் போயிருந்த நிலையில், ஜனாதிபதி சி ஜின் பிங்கின் பிரதிநிதிகள் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதாவது ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆணைக்குழுவால் அதிகாரி ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் என்பதற்கான முதல் அறிகுறியாக இது  பெரும்பாலும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.அந்த அதிகாரி இராணுவ அதிகாரியாக இருந்தால், மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆணைக்குழுவால்தான் ஒழுங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ அண்மைகாலமாக பொதுவெளியில் தென்படாதுள்ளார்.ஜெனரல் லி கடந்த இரண்டு வாரங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. முக்கியமான பல கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.சீனாவில் சமீபமாக பல உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் லி ஷாங்ஃபூவையும் பல நாட்களாக பொதுவெளியில் காணப்படுவதில்லை.லி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக 'தி லால் ஸ்ட்ரீட் ஜர்னல்' கடந்த வெள்ளியன்று செய்தி வெளியிட்டது.இந்நிலையில் தற்போது மற்றுமொரு அதிகாரியை காணவில்லையென சீனாவில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement