• May 07 2024

இரண்டு ஹெலிகொப்டர்கள் விபத்து - ஒருவர் பலி! 7 பேர் மாயம்..!

Chithra / Apr 21st 2024, 2:16 pm
image

Advertisement

 

 

பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஜப்பான்  கடற்படையின் 2 ஹெலிகொப்டர்கள் விபத்துக்குள்ளானாதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த ஹெலிகொப்டர் விபத்து நேற்று  நள்ளிரவு நடந்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா  தெரிவித்துள்ளார்.

எட்டு குழுவினர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகொப்டர்கள் விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் கடசார் தற்காப்பு படையை சேர்ந்த SH-60K என்கிற இரண்டு ஹெலிகொப்டர்கள் தலா நான்கு பேருடன் பயணித்துள்ளது.

சனிக்கிழமை இரவு டோக்கியோ நகரின் தெற்கு திசையில் சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டோரிஷிமா தீவு அருகே கடைசியாக இந்த ஹெலிகொப்டர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அதன்பிறகு ஹெலிகொப்டர்களின் தொடர்பை பெற இயலவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர்  மினோரு கிஹாரா செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு ஹெலிகொப்டர்கள் விபத்து - ஒருவர் பலி 7 பேர் மாயம்.   பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஜப்பான்  கடற்படையின் 2 ஹெலிகொப்டர்கள் விபத்துக்குள்ளானாதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகொப்டர் விபத்து நேற்று  நள்ளிரவு நடந்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா  தெரிவித்துள்ளார்.எட்டு குழுவினர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகொப்டர்கள் விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.ஜப்பான் நாட்டின் கடசார் தற்காப்பு படையை சேர்ந்த SH-60K என்கிற இரண்டு ஹெலிகொப்டர்கள் தலா நான்கு பேருடன் பயணித்துள்ளது.சனிக்கிழமை இரவு டோக்கியோ நகரின் தெற்கு திசையில் சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டோரிஷிமா தீவு அருகே கடைசியாக இந்த ஹெலிகொப்டர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.அதன்பிறகு ஹெலிகொப்டர்களின் தொடர்பை பெற இயலவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர்  மினோரு கிஹாரா செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement