• May 06 2024

மத்தள விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய 3 விமானங்கள் - வெளியான காரணம்!samugammedia

Sharmi / Apr 26th 2023, 10:36 am
image

Advertisement

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில், நிலவும் மோசமான வானிலை காரணமாக அங்கு வந்த மூன்று விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

நேற்று பிற்பகல் திடீரென பெய்த கடும் மழை காரணமாக மாலைதீவின் மாலேயில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

மேலும் கான் தீவில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல். இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த அதே விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஆகியவையும் திருப்பி விடப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி நிலைமை சீரடைந்ததை அடுத்து இந்த மூன்று விமானங்களிலும் பயணித்தவர்கள் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மோசமான காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய இரண்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென் கொரியாவில் உள்ள இன்சியான் மற்றும் இந்தியாவின் பெங்களூருக்கு புறப்பட வேண்டிய இரண்டு விமானங்கள் தாமதமாகியுள்ளன.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்தள விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய 3 விமானங்கள் - வெளியான காரணம்samugammedia கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில், நிலவும் மோசமான வானிலை காரணமாக அங்கு வந்த மூன்று விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.நேற்று பிற்பகல் திடீரென பெய்த கடும் மழை காரணமாக மாலைதீவின் மாலேயில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. மேலும் கான் தீவில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல். இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த அதே விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஆகியவையும் திருப்பி விடப்பட்டன.கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி நிலைமை சீரடைந்ததை அடுத்து இந்த மூன்று விமானங்களிலும் பயணித்தவர்கள் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.மோசமான காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய இரண்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தென் கொரியாவில் உள்ள இன்சியான் மற்றும் இந்தியாவின் பெங்களூருக்கு புறப்பட வேண்டிய இரண்டு விமானங்கள் தாமதமாகியுள்ளன.இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement