• May 07 2024

மக்களுக்காக வாக்களிக்கப்போகிறீர்களா? அல்லது கொள்ளையடித்தவர்களுக்கு வாக்களிக்கப்போகிறீர்களா? - சாணக்கியன் எம்.பி. அதிரடி..!samugammedia

Tharun / Nov 20th 2023, 6:57 pm
image

Advertisement

பொருளாதார குற்றங்களை விசாரித்து இவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். கொள்ளையடித்த பணத்தை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அவர்களையும் தண்டிக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினரும் அமைச்சருமான  சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார் 

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் வரவு செலவு திட்டத்தின் மீதான உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

2023 முன்வைக்கப்பட வரவு செலவு திட்டம் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி எதுவும் முன்வைக்கப்படவில்லை. யுத்தம் முடிவுற்று 14 வருடங்களுக்கு பிறகும் பின் தங்கிய நிலையிலேயே கிழக்கு மாகாணம் உள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் வரவேண்டுமென கிழக்கு மாகாண மக்கள் பகல் கனவு கண்டு  வாக்களித்தனர். அதன்படி 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில்  ஆளும் கட்சியில் தெரிவு செய்யப்பட்டனர். ஆனாலும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. இதற்கு காரணம்   பொருளாதார நெருக்கடியும், பொருளாதார குற்றங்களும் ஆகும். 

கிழக்கு மாகாணத்திற்கு எவ்வித பயனும் இல்லாத அமைச்சு பதவிகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். பொருளாதார குற்றங்களை விசாரித்து இவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். கொள்ளையடித்த பணத்தை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அவர்களையும் தண்டிக்க வேண்டும். நீங்கள் மக்களுக்காக அரசியலில் ஈடுபடவில்லை. உங்கள் சுநலத்திற்காகவே அரசியலில் உள்ளீர்கள். நீங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் மக்களுக்கு எதிராக உள்ளீர்கள். 

வட கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டு இருப்பதை நீங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். அரசாங்கம் எத்துறைக்கும் எதுவும் செய்யவில்லை. எல்லாவற்றையும் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் துறைகளுக்கான அமைச்சரும் இதனை கண்டுகொள்ளவில்லை. மக்களுக்கு ஆதரவாக இருந்தால் நீங்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்க கூடாது.  அப்படி நீங்கள் செய்தால் எதிர்வரும் தேர்தலில் மக்கள் உங்களுக்கு சரியான பாடம் படிப்பிப்பார்கள். 

அரசாங்கம் ஒரு பக்கம் காசை தந்துவிட்டு மறுபக்கம் அதனை புடுங்கி எடுக்கிறார்கள். இவ்வாறான நிலையே இங்கு காணப்படுகிறது. இந்த வரவு செலவு திட்டத்தால் எதுவித நன்மையும் இல்லை. என மேலும் தெரிவித்துள்ளார் 

மக்களுக்காக வாக்களிக்கப்போகிறீர்களா அல்லது கொள்ளையடித்தவர்களுக்கு வாக்களிக்கப்போகிறீர்களா - சாணக்கியன் எம்.பி. அதிரடி.samugammedia பொருளாதார குற்றங்களை விசாரித்து இவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். கொள்ளையடித்த பணத்தை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அவர்களையும் தண்டிக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினரும் அமைச்சருமான  சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் வரவு செலவு திட்டத்தின் மீதான உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் 2023 முன்வைக்கப்பட வரவு செலவு திட்டம் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி எதுவும் முன்வைக்கப்படவில்லை. யுத்தம் முடிவுற்று 14 வருடங்களுக்கு பிறகும் பின் தங்கிய நிலையிலேயே கிழக்கு மாகாணம் உள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் வரவேண்டுமென கிழக்கு மாகாண மக்கள் பகல் கனவு கண்டு  வாக்களித்தனர். அதன்படி 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில்  ஆளும் கட்சியில் தெரிவு செய்யப்பட்டனர். ஆனாலும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. இதற்கு காரணம்   பொருளாதார நெருக்கடியும், பொருளாதார குற்றங்களும் ஆகும். கிழக்கு மாகாணத்திற்கு எவ்வித பயனும் இல்லாத அமைச்சு பதவிகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். பொருளாதார குற்றங்களை விசாரித்து இவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். கொள்ளையடித்த பணத்தை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அவர்களையும் தண்டிக்க வேண்டும். நீங்கள் மக்களுக்காக அரசியலில் ஈடுபடவில்லை. உங்கள் சுநலத்திற்காகவே அரசியலில் உள்ளீர்கள். நீங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் மக்களுக்கு எதிராக உள்ளீர்கள். வட கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டு இருப்பதை நீங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். அரசாங்கம் எத்துறைக்கும் எதுவும் செய்யவில்லை. எல்லாவற்றையும் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் துறைகளுக்கான அமைச்சரும் இதனை கண்டுகொள்ளவில்லை. மக்களுக்கு ஆதரவாக இருந்தால் நீங்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்க கூடாது.  அப்படி நீங்கள் செய்தால் எதிர்வரும் தேர்தலில் மக்கள் உங்களுக்கு சரியான பாடம் படிப்பிப்பார்கள். அரசாங்கம் ஒரு பக்கம் காசை தந்துவிட்டு மறுபக்கம் அதனை புடுங்கி எடுக்கிறார்கள். இவ்வாறான நிலையே இங்கு காணப்படுகிறது. இந்த வரவு செலவு திட்டத்தால் எதுவித நன்மையும் இல்லை. என மேலும் தெரிவித்துள்ளார் 

Advertisement

Advertisement

Advertisement