• May 06 2024

இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம்! சிறிதரன் எம்.பி பகிரங்கம் samugammedia

Chithra / Oct 30th 2023, 8:14 am
image

Advertisement

 

ஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில் ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இன் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் இந்தியா தமிழர்களை எதிரியாகவும் சிங்களவர்களை நண்பனாகவும் கொண்டு செயற்படுவது போல இலங்கை தமிழர்களையும் இந்தியாவையும் எதிரியாகவும் சீனாவை நண்பனாகவும் சிங்கள மக்கள் கொண்டு செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே சீனா செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவின் செயற்பாடுகளை இந்தியா தெளிவாக புரிந்துக் கொள்ளாவிடின் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.

அத்துடன் விடுதலை புலிகளின் செயற்பாடு இலங்கையில் இருந்த போது இந்தியாவிற்கு பாதுகாப்பு அதிகமாக இருந்தது என்பதை அந்த நாடு இதுவரை உணரவில்லை எனவும்அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம் சிறிதரன் எம்.பி பகிரங்கம் samugammedia  ஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில் ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இன் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அத்துடன் இந்தியா தமிழர்களை எதிரியாகவும் சிங்களவர்களை நண்பனாகவும் கொண்டு செயற்படுவது போல இலங்கை தமிழர்களையும் இந்தியாவையும் எதிரியாகவும் சீனாவை நண்பனாகவும் சிங்கள மக்கள் கொண்டு செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே சீனா செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.சீனாவின் செயற்பாடுகளை இந்தியா தெளிவாக புரிந்துக் கொள்ளாவிடின் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.அத்துடன் விடுதலை புலிகளின் செயற்பாடு இலங்கையில் இருந்த போது இந்தியாவிற்கு பாதுகாப்பு அதிகமாக இருந்தது என்பதை அந்த நாடு இதுவரை உணரவில்லை எனவும்அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement