• Dec 04 2024

முன்னாள் அமைச்சர் பந்துலவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு!

Chithra / Dec 3rd 2024, 8:40 am
image


சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி 50 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள வரி வருமான இழப்பு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி பந்துல குணவர்தன அன்றைய காலப்பகுதியில் வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் பந்துலவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி 50 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள வரி வருமான இழப்பு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி பந்துல குணவர்தன அன்றைய காலப்பகுதியில் வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement