• Dec 04 2024

மூத்த பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம்!

Chithra / Dec 3rd 2024, 8:33 am
image

 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தவிர 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முத்துமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ் தெஹிதெனிய, நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மூத்த பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம்  பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இது தவிர 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முத்துமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ் தெஹிதெனிய, நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement