• May 07 2024

இலங்கையிலுள்ள வாகனங்களில் இப்படி ஒரு குறைபாடா?- வெளியான அதிர்ச்சித் தகவல்!

Sharmi / Feb 12th 2023, 7:02 pm
image

Advertisement

இலங்கையில் 700,000 இற்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் குறைபாடுள்ள காற்றுப் பைகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிசாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையின் வீதிகளில் பழுதடைந்த காற்றுப் பைகள் கொண்ட எஸ்யுவி உட்பட பல நவீன கார்கள், எவ்வித பரிசோதனையும் இன்றி பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வாகன இறக்குமதி முகவர்கள், பாதுகாப்பு குறைபாடுகளுடன் அடையாளம் காணப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களை திணைக்களத்திடம் இருந்து சேகரித்து, அந்த வாகனங்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பழுதடைந்த காற்றுப் பைகளை கொண்டுள்ள வாகனங்களை செலுத்துவது மிகவும் ஆபத்தானதாகும். இந்தநிலையில், மீள அழைக்கப்படும் வாகனங்கள் தொடர்பிலான தகவல்கள் தொகுக்கப்பட்டு ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவுளளன.

இலங்கையில் உள்ள கார் இறக்குமதி முகவர்களால் காற்றுப் பையை மீண்டும் நிறுவுவதற்காக 47 ரகங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதில் ஹோண்டாவின் ஒன்பது வகைகளின் கீழ் 33 ரகங்களும், மிட்சுபிசியின் மூன்று பிரிவுகளின் கீழ் எட்டு ரகங்களும், டொயோட்டாவின் ஆறு ரகங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள வாகனங்களில் இப்படி ஒரு குறைபாடா- வெளியான அதிர்ச்சித் தகவல் இலங்கையில் 700,000 இற்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் குறைபாடுள்ள காற்றுப் பைகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிசாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையின் வீதிகளில் பழுதடைந்த காற்றுப் பைகள் கொண்ட எஸ்யுவி உட்பட பல நவீன கார்கள், எவ்வித பரிசோதனையும் இன்றி பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வாகன இறக்குமதி முகவர்கள், பாதுகாப்பு குறைபாடுகளுடன் அடையாளம் காணப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களை திணைக்களத்திடம் இருந்து சேகரித்து, அந்த வாகனங்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பழுதடைந்த காற்றுப் பைகளை கொண்டுள்ள வாகனங்களை செலுத்துவது மிகவும் ஆபத்தானதாகும். இந்தநிலையில், மீள அழைக்கப்படும் வாகனங்கள் தொடர்பிலான தகவல்கள் தொகுக்கப்பட்டு ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவுளளன. இலங்கையில் உள்ள கார் இறக்குமதி முகவர்களால் காற்றுப் பையை மீண்டும் நிறுவுவதற்காக 47 ரகங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இதில் ஹோண்டாவின் ஒன்பது வகைகளின் கீழ் 33 ரகங்களும், மிட்சுபிசியின் மூன்று பிரிவுகளின் கீழ் எட்டு ரகங்களும், டொயோட்டாவின் ஆறு ரகங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement