• May 07 2024

நான் அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வேலை செய்யவில்லை. வேலை செய்துவிட்ட பிறகே அறிக்கை விடுகின்றேன். - பாராளுமன்றத்தில் உரக்க கூறிய ஜீவன் தொண்டமான்..!samugammedia

Tharun / Nov 25th 2023, 6:19 pm
image

Advertisement

மாநகர சபையில் அரசியல் தலையீடு அதிகமாக இருந்தது என்று நீங்கள் சொன்னீர்கள். இதற்கான பதிலை முன்னாள் கல்வி அமைச்சரே சொல்லட்டும். அடுத்ததாக நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் போலவே இந்த வரவு செலவு திட்டம் உள்ளது. அதற்கு  சிவப்பு  கொடி காட்டினீர்கள். இதற்கு பச்சை கொடி காட்டுகிறீர்கள். அதுவும் ஒரு அரசியல் தானே. என பாராளுமன்றில் இன்றைய வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அமைச்சர்  உதயகுமார் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

காணி விவகாரத்தில் சரியான அடையாளப்படுத்தல்கள் தேவை. இதற்கான சான்றுகள் உள்ளன. எனவே சரியான முறையில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குக.  10000 வீடு சம்பந்தமாக நாங்கள் அறிக்கை மட்டுமே விடுகிறோம் நீங்கள் சொன்னீர்கள். இதற்கு நிதி வழங்குவது இந்திய அரசாங்கம். அறிக்கை விட்டது நாங்கள் அல்ல. இந்திய நிதி அமைச்சரே அறிக்கை விட்டவர். அவரை நீங்கள் விமர்சித்தது தவறு. 10000 வீடு சம்பந்தமாக நிர்மலா சீதாராமன் எமது அழைப்பின் பேரிலே வந்தார். ஆனால் உதயகுமார் சொல்கிறார் அது பொய் என்று, நல்லது செய்தவர்களை நாங்கள் அவ்வாறு பேச கூடாது. எனவே தவறு செய்ய வேண்டாம். 

தவறான விடயங்களை சொல்லி மக்களை திசை திருப்ப கூடாது எண்டு நீங்கள் சொன்னீர்கள். 2 வருடமாக இழுக்கப்பட்ட நானு ஓயா  திட்டத்தை நாங்கள் செய்து முடித்தோம். அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் அதன் தேவைக்கு ஏற்றாற் போலவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது. 

நாங்கள் விருப்பத்துடன் புரிந்துணர்வுடன் வேலை செய்கின்றோம். நீங்கள் தவறான குற்றச்சாட்டை வைத்தால் நான் அதற்கு பதிலளிக்க வேண்டும். அதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது இருக்கும் காலகட்டத்தில் நாங்கள் மக்களை திசை திருப்ப கூடாது. மலையக மக்கள் எத்தனையோ வரவு செலவு திட்டத்தை பார்த்தவர்கள். ஜனாதிபதி உரிமை பற்றியே வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டரே தவிர சலுகைகள் பற்றி சொல்லவில்லை என்று தான்  நான் கூறினேன். நான் அறிக்கையை சமர்ப்பித்து  விட்டு வேலை செய்யவில்லை. வேலை செய்துவிட்ட பிறகே அறிக்கை விடுகின்றேன். நான் வெளிப்படையாக கூறுகிறேன். இந்த சபையில் நாங்கள்  நேரடி விவாதத்திற்கு தயார்? நீங்கள் தயாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வேலை செய்யவில்லை. வேலை செய்துவிட்ட பிறகே அறிக்கை விடுகின்றேன். - பாராளுமன்றத்தில் உரக்க கூறிய ஜீவன் தொண்டமான்.samugammedia மாநகர சபையில் அரசியல் தலையீடு அதிகமாக இருந்தது என்று நீங்கள் சொன்னீர்கள். இதற்கான பதிலை முன்னாள் கல்வி அமைச்சரே சொல்லட்டும். அடுத்ததாக நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் போலவே இந்த வரவு செலவு திட்டம் உள்ளது. அதற்கு  சிவப்பு  கொடி காட்டினீர்கள். இதற்கு பச்சை கொடி காட்டுகிறீர்கள். அதுவும் ஒரு அரசியல் தானே. என பாராளுமன்றில் இன்றைய வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் பாராளுமன்ற அமைச்சர்  உதயகுமார் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காணி விவகாரத்தில் சரியான அடையாளப்படுத்தல்கள் தேவை. இதற்கான சான்றுகள் உள்ளன. எனவே சரியான முறையில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குக.  10000 வீடு சம்பந்தமாக நாங்கள் அறிக்கை மட்டுமே விடுகிறோம் நீங்கள் சொன்னீர்கள். இதற்கு நிதி வழங்குவது இந்திய அரசாங்கம். அறிக்கை விட்டது நாங்கள் அல்ல. இந்திய நிதி அமைச்சரே அறிக்கை விட்டவர். அவரை நீங்கள் விமர்சித்தது தவறு. 10000 வீடு சம்பந்தமாக நிர்மலா சீதாராமன் எமது அழைப்பின் பேரிலே வந்தார். ஆனால் உதயகுமார் சொல்கிறார் அது பொய் என்று, நல்லது செய்தவர்களை நாங்கள் அவ்வாறு பேச கூடாது. எனவே தவறு செய்ய வேண்டாம். தவறான விடயங்களை சொல்லி மக்களை திசை திருப்ப கூடாது எண்டு நீங்கள் சொன்னீர்கள். 2 வருடமாக இழுக்கப்பட்ட நானு ஓயா  திட்டத்தை நாங்கள் செய்து முடித்தோம். அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் அதன் தேவைக்கு ஏற்றாற் போலவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது. நாங்கள் விருப்பத்துடன் புரிந்துணர்வுடன் வேலை செய்கின்றோம். நீங்கள் தவறான குற்றச்சாட்டை வைத்தால் நான் அதற்கு பதிலளிக்க வேண்டும். அதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது இருக்கும் காலகட்டத்தில் நாங்கள் மக்களை திசை திருப்ப கூடாது. மலையக மக்கள் எத்தனையோ வரவு செலவு திட்டத்தை பார்த்தவர்கள். ஜனாதிபதி உரிமை பற்றியே வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டரே தவிர சலுகைகள் பற்றி சொல்லவில்லை என்று தான்  நான் கூறினேன். நான் அறிக்கையை சமர்ப்பித்து  விட்டு வேலை செய்யவில்லை. வேலை செய்துவிட்ட பிறகே அறிக்கை விடுகின்றேன். நான் வெளிப்படையாக கூறுகிறேன். இந்த சபையில் நாங்கள்  நேரடி விவாதத்திற்கு தயார் நீங்கள் தயாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement