• May 07 2024

இலங்கையில் ஒன்றரை கோடிக்கும் அதிக ஸ்மார்ட்போன்கள் உள்ளதா? வெளியான தகவல் samugamMedia

Chithra / Mar 15th 2023, 3:32 pm
image

Advertisement

நாட்டிலுள்ள 2 கோடி 30 இலட்சத்திற்கும் அதிகளவான மக்கள் தொகைக்கு மத்தியில் 1 கோடியே 58 இலட்சத்து 72,594 பதிவு செய்யப்பட்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் காணப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 1 இலட்சத்து 34,451 கைபேசிகள் தொலைந்துவிட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

2019 இல் தொலைந்து போன தொலைபேசிகளை மீட்பதற்காக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு தொலைந்த தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் அனுப்பி வைத்திருந்தனர்.


இவ்வாறு, 2019ஆம் ஆண்டு 40,067 கைபேசிகள், 2020ஆம் ஆண்டில் 12,567 கைபேசிகள், 2021ஆம் ஆண்டு 27,933 கைபேசிகள், 2022ஆம் ஆண்டு 45,362 கைபேசிகள் மற்றும் இந்தாண்டு முதலிரண்டு மாதங்களில் 8,422 கைபேசி தொலைந்து போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் தொலைந்து போன கைபேசிகளை மீட்டெடுப்பது குறித்த அறிக்கைகள் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் ஒன்றரை கோடிக்கும் அதிக ஸ்மார்ட்போன்கள் உள்ளதா வெளியான தகவல் samugamMedia நாட்டிலுள்ள 2 கோடி 30 இலட்சத்திற்கும் அதிகளவான மக்கள் தொகைக்கு மத்தியில் 1 கோடியே 58 இலட்சத்து 72,594 பதிவு செய்யப்பட்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் காணப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளில் 1 இலட்சத்து 34,451 கைபேசிகள் தொலைந்துவிட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 2019 இல் தொலைந்து போன தொலைபேசிகளை மீட்பதற்காக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு தொலைந்த தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் அனுப்பி வைத்திருந்தனர்.இவ்வாறு, 2019ஆம் ஆண்டு 40,067 கைபேசிகள், 2020ஆம் ஆண்டில் 12,567 கைபேசிகள், 2021ஆம் ஆண்டு 27,933 கைபேசிகள், 2022ஆம் ஆண்டு 45,362 கைபேசிகள் மற்றும் இந்தாண்டு முதலிரண்டு மாதங்களில் 8,422 கைபேசி தொலைந்து போயுள்ளதாக தெரியவந்துள்ளது.இருப்பினும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் தொலைந்து போன கைபேசிகளை மீட்டெடுப்பது குறித்த அறிக்கைகள் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement