• May 06 2024

இட்லி பிரியரின் சாகசம்..! 6லட்சத்துக்கு இட்லி ஆர்டர்-தெறித்தோடிய நிறுவனம்!samugammedia

Sharmi / Apr 5th 2023, 10:26 am
image

Advertisement

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச இட்லி தினமாக கொண்டாடப்படுகிறது.

தென்னிந்தியாவில் அதிக மக்களால் விரும்பி உண்ணப்படும் இட்லிக்கென  தனி ரசிகர் படையே உண்டு.



 அந்த வகையில் சமீபத்தில் ஸ்விக்கி நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் அதில் அவர்களே எதிர்பார்க்காத  சில ஆச்சரியமான புள்ளி விவரங்களை கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவில் எந்த அளவிற்கு இட்லி பிரபலமாக உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக இந்த புள்ளி விவரம் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிடைத்துள்ள தகவலின்படி இந்தியாவில் மட்டும் கடந்த வருடத்தில் 33 மில்லியன் பிளேட் இட்லிக்கள் ஸ்விக்கி நிறுவனத்தின் மூலம் டெலிவரி  செய்யப்பட்டுள்ளதாக அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த இட்லி பிரியர் ஒருவர் கடந்த 12 மாதங்களில் மட்டும் 6 லட்ச ரூபாய்க்கு இட்லி ஆர்டர் செய்துள்ளதாகவும்  அந்த மனிதரின் இட்லி மீது உள்ள காதலை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதுஎன்றும் தெரிவித்துள்ளது.



மேலும் ஸ்விக்கியில் அதிக அளவில் இட்லி ஆர்டர் செய்தவர்கள் வரிசையில் இவர் முன்னிலையில் உள்ளார் என்பதுடன்  கிட்டத்தட்ட 8,428 பிளேட் இட்லிக்களை  தனது நண்பர்கள், குடும்பத்தினருக்கென அவர் ஆர்டர் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 இந்தியாவில் அதிக இட்லிகளை ஆர்டர் செய்த நகரங்களின் வரிசையில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகியவை முன்னிலையில் உள்ளதாகவும்  டெல்லி, கொல்கட்டா, கொச்சி, மும்பை, கோயம்புத்தூர், புனே, விசாகப்பட்டினம் போன்ற நகரங்கலிளும் இட்லி கணிசமான அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இட்லி பிரியரின் சாகசம். 6லட்சத்துக்கு இட்லி ஆர்டர்-தெறித்தோடிய நிறுவனம்samugammedia ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச இட்லி தினமாக கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் அதிக மக்களால் விரும்பி உண்ணப்படும் இட்லிக்கென  தனி ரசிகர் படையே உண்டு.  அந்த வகையில் சமீபத்தில் ஸ்விக்கி நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் அதில் அவர்களே எதிர்பார்க்காத  சில ஆச்சரியமான புள்ளி விவரங்களை கண்டறிந்துள்ளனர்.இந்தியாவில் எந்த அளவிற்கு இட்லி பிரபலமாக உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக இந்த புள்ளி விவரம் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கிடைத்துள்ள தகவலின்படி இந்தியாவில் மட்டும் கடந்த வருடத்தில் 33 மில்லியன் பிளேட் இட்லிக்கள் ஸ்விக்கி நிறுவனத்தின் மூலம் டெலிவரி  செய்யப்பட்டுள்ளதாக அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தை சேர்ந்த இட்லி பிரியர் ஒருவர் கடந்த 12 மாதங்களில் மட்டும் 6 லட்ச ரூபாய்க்கு இட்லி ஆர்டர் செய்துள்ளதாகவும்  அந்த மனிதரின் இட்லி மீது உள்ள காதலை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதுஎன்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்விக்கியில் அதிக அளவில் இட்லி ஆர்டர் செய்தவர்கள் வரிசையில் இவர் முன்னிலையில் உள்ளார் என்பதுடன்  கிட்டத்தட்ட 8,428 பிளேட் இட்லிக்களை  தனது நண்பர்கள், குடும்பத்தினருக்கென அவர் ஆர்டர் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இந்தியாவில் அதிக இட்லிகளை ஆர்டர் செய்த நகரங்களின் வரிசையில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகியவை முன்னிலையில் உள்ளதாகவும்  டெல்லி, கொல்கட்டா, கொச்சி, மும்பை, கோயம்புத்தூர், புனே, விசாகப்பட்டினம் போன்ற நகரங்கலிளும் இட்லி கணிசமான அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement