• May 27 2024

எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது...! பாராளுமன்றில் இம்தியாஸ் எம்.பி முறைப்பாடு...!samugammedia

Sharmi / Oct 4th 2023, 1:11 pm
image

Advertisement

பாராளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் சமர்ப்பித்தலின் போது எனது சிறப்புரிமை மீறப்பட்டிருக்கிறது. அதனால் இது தொடர்பாக பாராளுமன்ற சிறப்புரிமை குழுவில் விசாரித்து நீதியை பெற்றுத்தர வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (03) சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே  அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பாராளுமன்ற உறுப்பினராக நான் முதன்முறையாக முன்வைத்த இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் குறிப்பிட வேண்டும்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக  பாராளுமன்றத்தில் எனது கடமைகளை செய்யும் போது வேண்டுமென்றே அதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு  இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குள்ள சிறப்புரிமைகள் பாரதூரமாக மீறப்படுவதையே சபையில் முறைப்பாடாக முன்வைக்கின்றேன்.

பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு சபை  நிலையியற் செயற் குழுவின் உத்தரவுகளை தொடர்ந்து நிறைவேற்றத் தவறுவது பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு வேண்டுமென்றே சவால் விடுவதாக அமையும்.

நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க,பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் கட்டளைச் சட்டங்களை திருத்துவதற்காக நான் மூன்று தனிநபர் சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக  பொதுச் செயலாளருக்கு 2021 ஜனவரியில் சமர்ப்பித்தேன்.

இந்த மூன்று தனிநபர் பிரேரணை சட்ட வரைவுகளும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை.

இந்த மூன்று  சட்டமூலங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு,பின்னர் கடந்த வருடம் ஜூலை 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சினால் அது தொடர்பான அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. பாராளுமன்றில் இம்தியாஸ் எம்.பி முறைப்பாடு.samugammedia பாராளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் சமர்ப்பித்தலின் போது எனது சிறப்புரிமை மீறப்பட்டிருக்கிறது. அதனால் இது தொடர்பாக பாராளுமன்ற சிறப்புரிமை குழுவில் விசாரித்து நீதியை பெற்றுத்தர வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (03) சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே  அவர் இதனை தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,பாராளுமன்ற உறுப்பினராக நான் முதன்முறையாக முன்வைத்த இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் குறிப்பிட வேண்டும். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக  பாராளுமன்றத்தில் எனது கடமைகளை செய்யும் போது வேண்டுமென்றே அதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு  இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குள்ள சிறப்புரிமைகள் பாரதூரமாக மீறப்படுவதையே சபையில் முறைப்பாடாக முன்வைக்கின்றேன்.பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு சபை  நிலையியற் செயற் குழுவின் உத்தரவுகளை தொடர்ந்து நிறைவேற்றத் தவறுவது பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு வேண்டுமென்றே சவால் விடுவதாக அமையும்.நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க,பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் கட்டளைச் சட்டங்களை திருத்துவதற்காக நான் மூன்று தனிநபர் சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக  பொதுச் செயலாளருக்கு 2021 ஜனவரியில் சமர்ப்பித்தேன்.இந்த மூன்று தனிநபர் பிரேரணை சட்ட வரைவுகளும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை.இந்த மூன்று  சட்டமூலங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு,பின்னர் கடந்த வருடம் ஜூலை 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சினால் அது தொடர்பான அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement