• May 07 2024

அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தை; இணக்கப்பாடு எட்டப்பட்டதா..? ஜனாதிபதி - தமிழ் தரப்பு சந்திப்பில் நடந்தது என்ன? samugammedia

Chithra / May 15th 2023, 10:21 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற அதிகார பகிர்வு பேச்சுவார்த்தை எந்தவிதமான நம்பிக்கை தரக்கூடிய விடயங்களும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் நிறைவடைந்ததாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது.

இன்றைய கூட்டத்தில் அதிகார பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி தரப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

ஆனால், அதிகாரப்பகிர்வு தொடர்பில் தான் ஒரு குழுவை அமைப்பதாகவும், அந்த குழுவில் தமிழ் பிரதிநிதிகளை பங்கேற்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த குழுவின் மூலம் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அதிகாரப் பகிர்வு தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும்  சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார். 

எனினும், தமிழர் தரப்பில் இந்த விடயம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தை; இணக்கப்பாடு எட்டப்பட்டதா. ஜனாதிபதி - தமிழ் தரப்பு சந்திப்பில் நடந்தது என்ன samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற அதிகார பகிர்வு பேச்சுவார்த்தை எந்தவிதமான நம்பிக்கை தரக்கூடிய விடயங்களும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் நிறைவடைந்ததாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது.இன்றைய கூட்டத்தில் அதிகார பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி தரப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.ஆனால், அதிகாரப்பகிர்வு தொடர்பில் தான் ஒரு குழுவை அமைப்பதாகவும், அந்த குழுவில் தமிழ் பிரதிநிதிகளை பங்கேற்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.அந்த குழுவின் மூலம் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அதிகாரப் பகிர்வு தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும்  சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார். எனினும், தமிழர் தரப்பில் இந்த விடயம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement