• May 07 2024

நீர்ப்பாசன அமைச்சில் உள்ள தேவையற்ற அரசியல் தலையீடுகளை நீக்குக - ரவூப் ஹக்கீம் எம்.பி. ஆதங்கம்...!samugammedia

Tharun / Nov 25th 2023, 7:15 pm
image

Advertisement

நீர்ப்பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றோம்.  எனவே சில முக்கிய நீர் தேக்கங்களை அமைக்க வேண்டியது கட்டாயம். பலவருட காலமாக நாங்கள் இதைப்பற்றி கூறிவருகிறோம். ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

நிறுவன ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற நீர்பாசன செயற்பாடுகள் நாங்கள் செய்தவை எல்லாம் இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இதை நினைத்து நான் கவலை அடைகின்றேன். நீர்வழங்கல் சபை செயற்படவேண்டிய முறை தொடர்பாக சட்டம் இருக்கிறது. இதில் தேவையற்ற அரசியல் தலையீடுகள் இருப்பதாகவே தெரிகிறது. நம்பிக்கை இல்லாத  தன்மைகள் உள்ளன. மக்களுக்கு பதில் கூற முடியாத நிலை உள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாத நிலை காணப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறியே எல்லா விடயங்களும் நடைபெறுகிறது. புதிய அமைச்சருக்கு இது தெரியுமோ என்று எனக்கு தெரியாது. இதனை புதிய அமைச்சர் அனுமதிக்க கூடாது. இது சட்டத்துக்கு புறம்பான விடயமாகவே காணப்படுகிறது. 

இந்த அரசாங்கத்தின் திட்டம் யாதெனில் 78 வீதமான மக்களுக்கு  குடிநீர் வழங்குவது ஆனால் 50 வீதமான மக்களுக்கே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் குடிநீர் திட்டம் மூலமாக மீதியாகவுள்ள 28 வீதமான மக்களுக்கு வழங்குவதாக சொன்னார்கள். ஆனால் அத்திட்டம் தோல்வியடைந்தது. இன்று குடிநீர் குழாய்கள் துறைமுகத்தில் குவிந்து கிடக்கின்றன. அதனை பணம் செலுத்தி எடுப்பதற்கு வழி இல்லை. இது சரியான இலக்கு அல்ல. இது நாட்டின் நீர்வளங்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது. நாம் இதனை சரி செய்ய வேண்டும். கடந்த காலத்தில் நான் பெரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். 

நீர்ப்பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றோம்.  எனவே சில முக்கிய நீர் தேக்கங்களை அமைக்க வேண்டியது கட்டாயம். பலவருட காலமாக நாங்கள் இதைப்பற்றி கூறிவருகிறோம். ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே இதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். என மேலும் தெரிவித்துள்ளார்.  

நீர்ப்பாசன அமைச்சில் உள்ள தேவையற்ற அரசியல் தலையீடுகளை நீக்குக - ரவூப் ஹக்கீம் எம்.பி. ஆதங்கம்.samugammedia நீர்ப்பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றோம்.  எனவே சில முக்கிய நீர் தேக்கங்களை அமைக்க வேண்டியது கட்டாயம். பலவருட காலமாக நாங்கள் இதைப்பற்றி கூறிவருகிறோம். ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் நிறுவன ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற நீர்பாசன செயற்பாடுகள் நாங்கள் செய்தவை எல்லாம் இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இதை நினைத்து நான் கவலை அடைகின்றேன். நீர்வழங்கல் சபை செயற்படவேண்டிய முறை தொடர்பாக சட்டம் இருக்கிறது. இதில் தேவையற்ற அரசியல் தலையீடுகள் இருப்பதாகவே தெரிகிறது. நம்பிக்கை இல்லாத  தன்மைகள் உள்ளன. மக்களுக்கு பதில் கூற முடியாத நிலை உள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாத நிலை காணப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறியே எல்லா விடயங்களும் நடைபெறுகிறது. புதிய அமைச்சருக்கு இது தெரியுமோ என்று எனக்கு தெரியாது. இதனை புதிய அமைச்சர் அனுமதிக்க கூடாது. இது சட்டத்துக்கு புறம்பான விடயமாகவே காணப்படுகிறது. இந்த அரசாங்கத்தின் திட்டம் யாதெனில் 78 வீதமான மக்களுக்கு  குடிநீர் வழங்குவது ஆனால் 50 வீதமான மக்களுக்கே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் குடிநீர் திட்டம் மூலமாக மீதியாகவுள்ள 28 வீதமான மக்களுக்கு வழங்குவதாக சொன்னார்கள். ஆனால் அத்திட்டம் தோல்வியடைந்தது. இன்று குடிநீர் குழாய்கள் துறைமுகத்தில் குவிந்து கிடக்கின்றன. அதனை பணம் செலுத்தி எடுப்பதற்கு வழி இல்லை. இது சரியான இலக்கு அல்ல. இது நாட்டின் நீர்வளங்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது. நாம் இதனை சரி செய்ய வேண்டும். கடந்த காலத்தில் நான் பெரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். நீர்ப்பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றோம்.  எனவே சில முக்கிய நீர் தேக்கங்களை அமைக்க வேண்டியது கட்டாயம். பலவருட காலமாக நாங்கள் இதைப்பற்றி கூறிவருகிறோம். ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே இதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். என மேலும் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement