• May 07 2024

சோவியத் யூனியனை சிதறடிக்க மேற்குலக நாடுகள் முயற்சி : ரஷ்யா குற்றச்சாட்டு! SamugamMedia

Tamil nila / Feb 26th 2023, 9:46 pm
image

Advertisement

மேற்குலக நாடுகள் முன்னாள் சோவியத் யூனியனை சிதறடிக்க முயல்கிறது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். 


ரஷ்யாவிற்கு நேட்டோவின் அணுசக்தி திறன்களை கணக்கில் எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் புட்டின் தெரிவித்தார். 


ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், ரஷ்ய இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக கூறினார். 


அமெரிக்காவும், ரஷ்யாவும் வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முயலும் நியூ ஸ்டார்ட் இடைநிறுத்தம் ரஷ்யாவிற்கு பாதுகாப்பு, மூலோபாய ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தில் இருந்து உருவானது எனவும் அவர் தெரிவித்தார். 


அனைத்து முன்னணி நேட்டோ நாடுகளும் தங்களின் முக்கிய இலக்கை நமக்கு மூலோபாய தோல்வியை ஏற்படுத்துவதாக அறிவித்திருக்கும் போது, இந்த நிலைமைகளில் அவற்றின் அணுசக்தி திறன்களை நாம் எப்படி புறக்கணிக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

சோவியத் யூனியனை சிதறடிக்க மேற்குலக நாடுகள் முயற்சி : ரஷ்யா குற்றச்சாட்டு SamugamMedia மேற்குலக நாடுகள் முன்னாள் சோவியத் யூனியனை சிதறடிக்க முயல்கிறது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு நேட்டோவின் அணுசக்தி திறன்களை கணக்கில் எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் புட்டின் தெரிவித்தார். ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், ரஷ்ய இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக கூறினார். அமெரிக்காவும், ரஷ்யாவும் வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முயலும் நியூ ஸ்டார்ட் இடைநிறுத்தம் ரஷ்யாவிற்கு பாதுகாப்பு, மூலோபாய ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தில் இருந்து உருவானது எனவும் அவர் தெரிவித்தார். அனைத்து முன்னணி நேட்டோ நாடுகளும் தங்களின் முக்கிய இலக்கை நமக்கு மூலோபாய தோல்வியை ஏற்படுத்துவதாக அறிவித்திருக்கும் போது, இந்த நிலைமைகளில் அவற்றின் அணுசக்தி திறன்களை நாம் எப்படி புறக்கணிக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

Advertisement

Advertisement

Advertisement