• Jul 03 2024

போதைக்கு எதிராக வீதியில் இறங்கிய சாய்ந்தமருது பாடசாலை மாணவர்கள்..!samugammedia

Sharmi / Aug 2nd 2023, 3:28 pm
image

Advertisement

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/அல்- ஹிலால் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் போதைப்பாவனைக்கு எதிரான வீதி ஊர்வலமும், போதைக்கு எதிரான பிரச்சாரமும், துண்டுப்பிரசுர விநியோகமும் பாடசாலை அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இன்று (02) சாய்ந்தமருது பிரதான வீதியில் நடைபெற்றது. 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஆலோசனைக்கிணங்க கல்முனை வலயக்கல்வி அலுவலக சிபாரிசின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/அல்- ஹிலால் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பேரணி, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வாகனத்தில் போதைப்பவனைக்கு எதிரான பிரச்சாரங்களுடன் பாடசாலை முன்றலில் ஆரம்பித்த இந்த பேரணி சாய்ந்தமருது பொதுச்சந்தை வரை சென்றது.

இந்த பேரணியின் போது போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களை கலந்துகொண்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கி வைத்தனர். 

இந்த பேரணியில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும், உதவிக்கல்வி பணிப்பாளருமான எம்.என்.ஏ.மலீக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹீர், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சுகாதார உத்தியோகத்தர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் மாணவர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




போதைக்கு எதிராக வீதியில் இறங்கிய சாய்ந்தமருது பாடசாலை மாணவர்கள்.samugammedia கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/அல்- ஹிலால் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் போதைப்பாவனைக்கு எதிரான வீதி ஊர்வலமும், போதைக்கு எதிரான பிரச்சாரமும், துண்டுப்பிரசுர விநியோகமும் பாடசாலை அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இன்று (02) சாய்ந்தமருது பிரதான வீதியில் நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஆலோசனைக்கிணங்க கல்முனை வலயக்கல்வி அலுவலக சிபாரிசின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/அல்- ஹிலால் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பேரணி, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வாகனத்தில் போதைப்பவனைக்கு எதிரான பிரச்சாரங்களுடன் பாடசாலை முன்றலில் ஆரம்பித்த இந்த பேரணி சாய்ந்தமருது பொதுச்சந்தை வரை சென்றது.இந்த பேரணியின் போது போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களை கலந்துகொண்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கி வைத்தனர். இந்த பேரணியில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும், உதவிக்கல்வி பணிப்பாளருமான எம்.என்.ஏ.மலீக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹீர், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சுகாதார உத்தியோகத்தர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் மாணவர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement