• May 07 2024

கடல் வழியாக தங்கம் கடத்தல்? 8 இலங்கை மீனவர்கள் உட்பட 12 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படை...! samugammedia

Chithra / Oct 24th 2023, 7:52 am
image

Advertisement


இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில்  மேற்கொண்டு அதிரடி நடவடிக்கையில் இலங்கைக்கு கடல் அட்டை மற்றும் சமையல் மஞ்சள் கடத்திய மண்டபத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டதுடன், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 இலங்கை மீனவர்கள்  நான்கு படகுடன் சிறை பிடிக்கப்பட்டு மண்டபம் அழைத்து வரப்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த நபர்கள் கடல்வழியாக  தலைமன்னாரிலிருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்க துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமுக்கு சொந்தமான ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த  இலங்கையைச் சேர்ந்த நான்கு மீன்பிடி பைபர் படகுகளையும்  அதிலிருந்த  8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்த இந்திய கடலோர  காவல் படை மீனவர்களை  கரைக்கு அழைத்து வந்து கொண்டிருந்த போது நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த பைப்பர் படகு ஒன்று  இந்திய கடலோர  காவல் படை வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

இதனை கண்ட கடலோர காவல் படை வீரர்கள் அந்த படகை மடக்கி பிடித்து படகில் ஏறி  சோதனை செய்ததில் படகில் சமையல் மஞ்சள் மூட்டைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் படகில் இருந்த நால்வர் மற்றும் இலங்கை மீனவர்கள் 8 எட்டு பேர் என மொத்தமாக 12 பேரையும் அவர்களது 5 படகுகளையும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

மண்டபம் படகில் இருந்த ஈசாக், முகைதீன், வாசிம், உபயதுல்லா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் 600 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை  கடல் வழியாக இலங்கை புத்தளத்திற்கு கடத்திச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மண்டபத்தைச் சேர்ந்த படகையும் அதிலிருந்து சமையல் மஞ்சள், கடல் அட்டை மற்றும் நால்வரையும் மண்டபம் சுங்கத் துறையில் அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டு அடுத்த கட்ட விசாரணைக்காக ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் எல்லை தாண்டி  மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் எட்டு பேரையும் படகுடன் இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமுக்கு அழைத்து சென்று மண்டபம்  மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைக்கப்பட உள்ளனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் கடத்தல் தங்கத்தை மண்டபத்தை சேர்ந்தவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து சமையல் மஞ்சள் மற்றும் கடல் அட்டை வாங்கி செல்ல நடுக்கடலில் காத்திருந்த போது பிடிப்பட்டனரா என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடல் வழியாக தங்கம் கடத்தல் 8 இலங்கை மீனவர்கள் உட்பட 12 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படை. samugammedia இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில்  மேற்கொண்டு அதிரடி நடவடிக்கையில் இலங்கைக்கு கடல் அட்டை மற்றும் சமையல் மஞ்சள் கடத்திய மண்டபத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டதுடன், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 இலங்கை மீனவர்கள்  நான்கு படகுடன் சிறை பிடிக்கப்பட்டு மண்டபம் அழைத்து வரப்பட்டனர்.இலங்கையைச் சேர்ந்த நபர்கள் கடல்வழியாக  தலைமன்னாரிலிருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்க துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமுக்கு சொந்தமான ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த  இலங்கையைச் சேர்ந்த நான்கு மீன்பிடி பைபர் படகுகளையும்  அதிலிருந்த  8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்த இந்திய கடலோர  காவல் படை மீனவர்களை  கரைக்கு அழைத்து வந்து கொண்டிருந்த போது நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த பைப்பர் படகு ஒன்று  இந்திய கடலோர  காவல் படை வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளனர்.இதனை கண்ட கடலோர காவல் படை வீரர்கள் அந்த படகை மடக்கி பிடித்து படகில் ஏறி  சோதனை செய்ததில் படகில் சமையல் மஞ்சள் மூட்டைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் படகில் இருந்த நால்வர் மற்றும் இலங்கை மீனவர்கள் 8 எட்டு பேர் என மொத்தமாக 12 பேரையும் அவர்களது 5 படகுகளையும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.மண்டபம் படகில் இருந்த ஈசாக், முகைதீன், வாசிம், உபயதுல்லா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் 600 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை  கடல் வழியாக இலங்கை புத்தளத்திற்கு கடத்திச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இதையடுத்து மண்டபத்தைச் சேர்ந்த படகையும் அதிலிருந்து சமையல் மஞ்சள், கடல் அட்டை மற்றும் நால்வரையும் மண்டபம் சுங்கத் துறையில் அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டு அடுத்த கட்ட விசாரணைக்காக ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.மேலும் எல்லை தாண்டி  மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் எட்டு பேரையும் படகுடன் இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமுக்கு அழைத்து சென்று மண்டபம்  மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைக்கப்பட உள்ளனர்.இதனிடையே கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் கடத்தல் தங்கத்தை மண்டபத்தை சேர்ந்தவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து சமையல் மஞ்சள் மற்றும் கடல் அட்டை வாங்கி செல்ல நடுக்கடலில் காத்திருந்த போது பிடிப்பட்டனரா என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement