• May 07 2024

இந்தியாவில் கடனை செலுத்த முடியாமல் விபரீத முடிவெடுத்த குடும்பம் - பின்னணியில் இலங்கையை சேர்ந்த கும்பல்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் samugammedia

Chithra / Oct 23rd 2023, 4:51 pm
image

Advertisement

 

கேரளாவில் குடும்பமொன்று விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவத்திற்கு  இலங்கையை சேர்ந்த இணையவழி கடன் வழங்கும் கும்பலே காரணம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கேரளாவில் கடமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இலங்கையை சேர்ந்த உடனடி கடன் வழங்கும் குற்றவாளிகள் வலையமைப்பே இதற்கு காரணம் என கண்டுபிடித்துள்ளனர்.

நிஜோ ஜொனி அவரது மனைவி இரண்டு குழந்தைகள் செப்டம்பர் 12ம் திகதி அவர்களின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இவர்களின் தற்கொலை குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டவேளை உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவருக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டமை தெரியவந்துள்ளது.

அது தொடர்பான விசாரணைகளை கேரள பொலிஸார் ஆரம்பித்த வேளை  பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்த விசாரணைகளின் போது ஜொனியின் மனைவி சில்பா கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடன்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆனால் அவரால் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்பட்டுள்ளது என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சில்பாவினால் கடனை திருப்ப முடியதா நிலையேற்பட்டவுடன் கடன் வழங்கிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபாச படங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.

அந்த படங்கள் எங்கிருந்து வந்தன என்பதை நாங்கள் ஆராய்ந்தவேளை அது இலங்கையிலிருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலில் இது வடஇந்தியாவை சேர்ந்தவர்கள் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் உரையாடிய வட்ஸ்அப் இலக்கங்கள் வேறு விடயத்தை தெரிவித்துள்ளன.

இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் இதில் தொடர்புபட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் மேலும் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடனை செலுத்த முடியாமல் விபரீத முடிவெடுத்த குடும்பம் - பின்னணியில் இலங்கையை சேர்ந்த கும்பல் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் samugammedia  கேரளாவில் குடும்பமொன்று விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவத்திற்கு  இலங்கையை சேர்ந்த இணையவழி கடன் வழங்கும் கும்பலே காரணம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.கேரளாவில் கடமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இலங்கையை சேர்ந்த உடனடி கடன் வழங்கும் குற்றவாளிகள் வலையமைப்பே இதற்கு காரணம் என கண்டுபிடித்துள்ளனர்.நிஜோ ஜொனி அவரது மனைவி இரண்டு குழந்தைகள் செப்டம்பர் 12ம் திகதி அவர்களின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.இவர்களின் தற்கொலை குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டவேளை உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவருக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டமை தெரியவந்துள்ளது.அது தொடர்பான விசாரணைகளை கேரள பொலிஸார் ஆரம்பித்த வேளை  பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.இந்த விசாரணைகளின் போது ஜொனியின் மனைவி சில்பா கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடன்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.ஆனால் அவரால் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்பட்டுள்ளது என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சில்பாவினால் கடனை திருப்ப முடியதா நிலையேற்பட்டவுடன் கடன் வழங்கிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபாச படங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.அந்த படங்கள் எங்கிருந்து வந்தன என்பதை நாங்கள் ஆராய்ந்தவேளை அது இலங்கையிலிருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முதலில் இது வடஇந்தியாவை சேர்ந்தவர்கள் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் உரையாடிய வட்ஸ்அப் இலக்கங்கள் வேறு விடயத்தை தெரிவித்துள்ளன.இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் இதில் தொடர்புபட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் மேலும் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement