• May 07 2024

இஸ்ரேலில் காயமடைந்த இலங்கை பிரஜை தொடர்பில் வெளியான தகவல் samugammedia

Chithra / Oct 15th 2023, 8:43 am
image

Advertisement

 

 இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, காயமடைந்த இலங்கை பிரஜை, சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு அந்த நாட்டிலிருந்து எந்தவித நட்டஈடும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் சுற்றுலா விசாவில் ஜோர்தானுக்குச் சென்றதாகவும், அதன் பின்னர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு சென்று பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டாரதெரிவித்தார்.

இதேவேளை, ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரண்டு இலங்கைப் பெண்கள் இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார நேற்று தெரிவித்தார்.

எனவே யுத்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் வருவதை தவிர்க்குமாறு இலங்கை தூதுவர் நிமல் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலில் காயமடைந்த இலங்கை பிரஜை தொடர்பில் வெளியான தகவல் samugammedia   இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, காயமடைந்த இலங்கை பிரஜை, சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.இதனால் அவருக்கு அந்த நாட்டிலிருந்து எந்தவித நட்டஈடும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.குறித்த நபர் சுற்றுலா விசாவில் ஜோர்தானுக்குச் சென்றதாகவும், அதன் பின்னர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு சென்று பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டாரதெரிவித்தார்.இதேவேளை, ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரண்டு இலங்கைப் பெண்கள் இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார நேற்று தெரிவித்தார்.எனவே யுத்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் வருவதை தவிர்க்குமாறு இலங்கை தூதுவர் நிமல் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement