• May 07 2024

மரண வீட்டிற்கு சென்ற நபர் விபத்தில் உயிரிழப்பு! - தமிழர் பகுதியில் சோகம் SamugamMedia

Chithra / Mar 11th 2023, 9:27 am
image

Advertisement

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியின் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாடசாலை வீதி விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கோ.முருகன் வயது (52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

உறவினர் ஒருவரின் மரண வீட்டில் கலந்து கொண்டவர்களுக்காக உணவினை கொள்வனவு செய்யும் முகமாக மோட்டார் சைக்கிளில் சென்றவேளை பின்னால் வந்த பட்டா ரக வாகனம் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவரை அருகில் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கியபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்ற பதில் நீதிபதி எம்.தயாபரன் விசாரணைகளை மேற்கொண்டு, பின்னர் சடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான கட்டளையினை காவல்துறையினருக்கு பணித்தார்.

விபத்திற்குள்ளான பட்டா ரக வாகனம், மோட்டார் சைக்கிள் என்பன காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்

காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


மரண வீட்டிற்கு சென்ற நபர் விபத்தில் உயிரிழப்பு - தமிழர் பகுதியில் சோகம் SamugamMedia மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியின் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.விபத்தில் பாடசாலை வீதி விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கோ.முருகன் வயது (52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.உறவினர் ஒருவரின் மரண வீட்டில் கலந்து கொண்டவர்களுக்காக உணவினை கொள்வனவு செய்யும் முகமாக மோட்டார் சைக்கிளில் சென்றவேளை பின்னால் வந்த பட்டா ரக வாகனம் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவரை அருகில் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கியபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்ற பதில் நீதிபதி எம்.தயாபரன் விசாரணைகளை மேற்கொண்டு, பின்னர் சடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான கட்டளையினை காவல்துறையினருக்கு பணித்தார்.விபத்திற்குள்ளான பட்டா ரக வாகனம், மோட்டார் சைக்கிள் என்பன காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement