• May 06 2024

சட்டவிரோத கடற்தொழில்களை தடை செய்யுமாறு கோரி உடுத்துறை மீனவர்களால் ஆர்ப்பாட்டம்!SamugamMedia

Sharmi / Feb 13th 2023, 6:25 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சட்டவிரோதமான கடற்தொழில்களை தடை செய்யுமாறு கோரி இன்றைய தினம்  மீனவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த மருதங்கணி போலீசார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீனவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர்.

இதன் அடிப்படையில் நாளைய தினம் குறித்த விடயம் தொடர்பில் ஆராய  55 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தில் ஒன்று கூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுவரை போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட  மீனவர்கள் இன்றைய தினம் குறித்த எதிர்ப்பு போராட்டத்தை கைவிடுவதாகவும் நாளைய தினம் ஒரு நல்ல முடிவு ஒன்று தரப்படாத பட்சத்தில் அல்லது எடுக்கப்படாத பட்சத்தில் தம்முடைய போராட்டம் தொடரும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக நீரியல் வளத்துறை  மற்றும்  கடற்தொழில் அமைச்சினால் விடுக்கப்பட்ட கட்டளைகளை கடற்படையினர் செயற்படுத்துவதில்லை என்றும், சட்ட விரோத தொழிலில் ஈடுபாடுபவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றே இன்று மீனவர்களால் பிரதான குற்றச்சாட்டுm முன்வைக்கப்பட்டிருந்தது.



சட்டவிரோத கடற்தொழில்களை தடை செய்யுமாறு கோரி உடுத்துறை மீனவர்களால் ஆர்ப்பாட்டம்SamugamMedia யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சட்டவிரோதமான கடற்தொழில்களை தடை செய்யுமாறு கோரி இன்றைய தினம்  மீனவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த மருதங்கணி போலீசார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீனவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர்.இதன் அடிப்படையில் நாளைய தினம் குறித்த விடயம் தொடர்பில் ஆராய  55 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தில் ஒன்று கூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுவரை போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட  மீனவர்கள் இன்றைய தினம் குறித்த எதிர்ப்பு போராட்டத்தை கைவிடுவதாகவும் நாளைய தினம் ஒரு நல்ல முடிவு ஒன்று தரப்படாத பட்சத்தில் அல்லது எடுக்கப்படாத பட்சத்தில் தம்முடைய போராட்டம் தொடரும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.குறிப்பாக நீரியல் வளத்துறை  மற்றும்  கடற்தொழில் அமைச்சினால் விடுக்கப்பட்ட கட்டளைகளை கடற்படையினர் செயற்படுத்துவதில்லை என்றும், சட்ட விரோத தொழிலில் ஈடுபாடுபவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றே இன்று மீனவர்களால் பிரதான குற்றச்சாட்டுm முன்வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement