• May 27 2024

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: 50 ஆயிரத்தை அண்மித்த உயிரிழப்பு!

Sharmi / Feb 12th 2023, 9:34 pm
image

Advertisement

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு துருக்கிக்கான விஜயத்தின் பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் நேற்றையதினம் நில அதிர்வு கேந்திர ஸ்தானமான கஹரஸ்மன்மராஸ் பகுதிக்கு சென்றுள்ளார்.

 இது தொடர்பில் அவர் கூறுகையில்,இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பதை துல்லியமாக கூற முடியாது.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளது.

இதேவேளை நிலநடுக்கத்தால் 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியா முழுவதும் குறைந்தது 870,000 பேருக்கு உணவுத் தேவைப்பாடு உள்ளது.”என கூறியுள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: 50 ஆயிரத்தை அண்மித்த உயிரிழப்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு துருக்கிக்கான விஜயத்தின் பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.அவர் நேற்றையதினம் நில அதிர்வு கேந்திர ஸ்தானமான கஹரஸ்மன்மராஸ் பகுதிக்கு சென்றுள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்,இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பதை துல்லியமாக கூற முடியாது.நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளது.இதேவேளை நிலநடுக்கத்தால் 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.துருக்கி மற்றும் சிரியா முழுவதும் குறைந்தது 870,000 பேருக்கு உணவுத் தேவைப்பாடு உள்ளது.”என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement