• May 07 2024

எமக்காக போரிட்டு மடிந்த மாவீரர்கள் - நாடாளுமன்றத்தில் நினைவு கூர்ந்த சுமந்திரன் எம்.பி..! samugammedia

Chithra / Nov 22nd 2023, 3:27 pm
image

Advertisement


நினைவேந்தல் வாரத்தில் எமக்காக போரிட்டு மடிந்தவர்களை நினைவு கூறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் அரசியல் அமைப்பு பேரவையில் ஒரு வெற்றிடம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கள் சித்தார்த்தனை தான் முன்மொழிந்ததாகவும் ஆனால் இன்று வரைக்கும் அரசியல் அமைப்பு பேரவைக்கு அவர் நியமிக்கப்படவில்லை.

இதேவேளை தாங்கள் இது சம்பந்தமாக பல தடவைகள் கேள்வியெழுப்பிய நிலையிலும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.

மேலும் இது ஒரு சட்ட ரீதியான விடயம் அல்ல, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் 

மற்றும் எதிர்கட்சியில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் கட்சிக்கான உரிமை அரசியல் அமைப்பு பேரவையில் மறுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற போது தமிழ் இன பிரச்சணையை தீர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டதாகவும் 

ஆனால் இது வரையில் இன பிரச்சணையை ஜனாதிபதியால் தீர்க்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் தங்களை அரசியல் அமைப்பின் பேரவையை விட்டு தூரமாக்கி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் இனப்பிரச்சணைக்கு தீர்வுகான வேண்டுமானால் அரசியல் அமைப்பின் பேரவையின் வெற்றிடத்தினை முதலில் நிரப்ப வேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எமக்காக போரிட்டு மடிந்த மாவீரர்கள் - நாடாளுமன்றத்தில் நினைவு கூர்ந்த சுமந்திரன் எம்.பி. samugammedia நினைவேந்தல் வாரத்தில் எமக்காக போரிட்டு மடிந்தவர்களை நினைவு கூறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் அரசியல் அமைப்பு பேரவையில் ஒரு வெற்றிடம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.அத்துடன் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கள் சித்தார்த்தனை தான் முன்மொழிந்ததாகவும் ஆனால் இன்று வரைக்கும் அரசியல் அமைப்பு பேரவைக்கு அவர் நியமிக்கப்படவில்லை.இதேவேளை தாங்கள் இது சம்பந்தமாக பல தடவைகள் கேள்வியெழுப்பிய நிலையிலும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.மேலும் இது ஒரு சட்ட ரீதியான விடயம் அல்ல, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் மற்றும் எதிர்கட்சியில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் கட்சிக்கான உரிமை அரசியல் அமைப்பு பேரவையில் மறுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற போது தமிழ் இன பிரச்சணையை தீர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டதாகவும் ஆனால் இது வரையில் இன பிரச்சணையை ஜனாதிபதியால் தீர்க்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.அத்துடன் தங்களை அரசியல் அமைப்பின் பேரவையை விட்டு தூரமாக்கி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தமிழ் இனப்பிரச்சணைக்கு தீர்வுகான வேண்டுமானால் அரசியல் அமைப்பின் பேரவையின் வெற்றிடத்தினை முதலில் நிரப்ப வேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement