• May 07 2024

புதிய வகை முகக் கவசத்தை கண்டுபிடித்து அசத்திய சீன இளைஞன்:வைரலாகும் காணொளி!

Sharmi / Dec 24th 2022, 6:59 pm
image

Advertisement

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்  அங்குள்ள வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களால் நிறைந்து காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சீன மக்கள் மக்கள் எப்போதும் பிரச்சனையை கையாள்வதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்குகிறார்கள்.  

இந்நிலையில்  கொக்கு வடிவ முகக்கவசத்துடன் ஒருவர் சாப்பிடும் காணொளி  இணையத்தில் வைரலாகி பல பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

காணொளியில் ஒரு நபர் உணவகத்தில் சாப்பிடுவதைக் காணலாம். முகக்கவசம் ஒரு பெரிய கொக்கு வடிவத்தில் காகிதத்தில் இருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. அவர் சாப்பிடும் போதெல்லாம் முகமூடி ஒரு கொக்கு வாய்போல் திறக்கிறது. 

குறித்த  காணொளியை  சபீர் என்பவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 17 வினாடிகள் கொண்ட குறித்த  காணொளி 18,000 பார்வைகளைக் குவித்துள்ளது. பலர் சிரிப்பு எமோஜிகளை பதிவில் பதிவிட்டுள்ளனர். 

சீனாவின் சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி,  இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் சுமார் 3.7 கோடி மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் சீனா நாட்டின் கொரோனா பாதிப்பு உலகிலேயே மிகப்பெரியது. 

மருத்துவமனைகளில்  நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட காணொளிகள்  சமூக வலைதளங்களில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதிய வகை முகக் கவசத்தை கண்டுபிடித்து அசத்திய சீன இளைஞன்:வைரலாகும் காணொளி சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.இந்நிலையில்  அங்குள்ள வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களால் நிறைந்து காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இதேவேளை சீன மக்கள் மக்கள் எப்போதும் பிரச்சனையை கையாள்வதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்குகிறார்கள்.  இந்நிலையில்  கொக்கு வடிவ முகக்கவசத்துடன் ஒருவர் சாப்பிடும் காணொளி  இணையத்தில் வைரலாகி பல பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காணொளியில் ஒரு நபர் உணவகத்தில் சாப்பிடுவதைக் காணலாம். முகக்கவசம் ஒரு பெரிய கொக்கு வடிவத்தில் காகிதத்தில் இருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. அவர் சாப்பிடும் போதெல்லாம் முகமூடி ஒரு கொக்கு வாய்போல் திறக்கிறது. குறித்த  காணொளியை  சபீர் என்பவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 17 வினாடிகள் கொண்ட குறித்த  காணொளி 18,000 பார்வைகளைக் குவித்துள்ளது. பலர் சிரிப்பு எமோஜிகளை பதிவில் பதிவிட்டுள்ளனர். சீனாவின் சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி,  இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் சுமார் 3.7 கோடி மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் சீனா நாட்டின் கொரோனா பாதிப்பு உலகிலேயே மிகப்பெரியது. மருத்துவமனைகளில்  நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட காணொளிகள்  சமூக வலைதளங்களில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.China devolops the latest mask to wear, eat and breathe during the Covid-19 outbreak. pic.twitter.com/OheK2CZykG— Tarek Fatah (@TarekFatah) December 24, 2022

Advertisement

Advertisement

Advertisement