• May 07 2024

ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கையரின் பூதவுடல் நாட்டிற்கு..! samugammedia

Chithra / Nov 9th 2023, 10:29 am
image

Advertisement


இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கை பிரஜையின் பூதவுடல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் யடவர பண்டாரவின் பூதவுடலே இவ்வாறு நாட்டிற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பூதலுடன் இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது.

இஸ்ரேலிலிருந்து டுபாய் வழியாக, டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று காலை 8.37ற்கு நாட்டிற்கு பூதவுடல் கொண்டு வரப்பட்டுள்ளது.

பூதவுடலை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக உயிரிழந்த சுஜித் யடவர பண்டாரவின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர், விமான நிலையத்திற்கு பிரசன்னமாகினர்.

அத்துடன், இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் விமான நிலையத்திற்கு சமூகமளித்தனர்.

சுஜித் யடவர பண்டாரவின் இறுதிக் கிரியைகள், வென்னப்புவ பகுதியில் எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 


ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கையரின் பூதவுடல் நாட்டிற்கு. samugammedia இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கை பிரஜையின் பூதவுடல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் யடவர பண்டாரவின் பூதவுடலே இவ்வாறு நாட்டிற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பூதலுடன் இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது.இஸ்ரேலிலிருந்து டுபாய் வழியாக, டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று காலை 8.37ற்கு நாட்டிற்கு பூதவுடல் கொண்டு வரப்பட்டுள்ளது.பூதவுடலை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக உயிரிழந்த சுஜித் யடவர பண்டாரவின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர், விமான நிலையத்திற்கு பிரசன்னமாகினர்.அத்துடன், இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் விமான நிலையத்திற்கு சமூகமளித்தனர்.சுஜித் யடவர பண்டாரவின் இறுதிக் கிரியைகள், வென்னப்புவ பகுதியில் எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement