• May 07 2024

இந்திய மீனவர்களுக்கு எமது கடற்பரப்பிற்குள் 3 நாட்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கிய அமைச்சர்- கொந்தளிக்கும் மீனவர்கள்! SamugamMedia

Sharmi / Feb 15th 2023, 12:23 pm
image

Advertisement

வல்லரசு என்ற போர்வையில் ஈழ தமிழ் மக்களை வைத்து தாயக்கட்டை காய் போன்ற அரசியல்வாதிகள் உருட்டி விளையாடும் நிலை தொடர்ந்த வண்ணமுள்ளதாக வடக்கு மாகாண கடலோடிகள் அமையத்தின் இணைப்பாளர் காத்தலிங்கம் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

சாதாரணமாகவே இந்திய மீனவர்கள் ஈழத்தமிழர்களை இடித்து கொல்லும் அளவிற்கு செயற்பட்டுவரும் நிலையில் 3 நாட்களுக்கு இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீனவ சமூகத்தையும் அவர்களது போராட்டங்களையும் வைத்துக் குளிர்காய்கின்ற எத்தனை அரசியல்வாதிகள் இந்த அமைச்சரின் அறிவிப்பை எதிர்த்துள்ளார்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். கடலில் மீன்வளம் இல்லாத நிலையிலேயே தான் சிறிய மீன்களை பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அதனால் தான் சுருக்கு வலையைப் பயன்படுத்த நேரிட்டது.

இந்நிலையை தோற்றுவித்தது யாரென மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.  இவ்வளவு காலமும் வட பகுதியில் சுருக்கு வலை முறை காணப்படாத நிலையில் இன்று அந்த நிலைக்கு கொண்டு வநது விட்டது எமது அரசியல்வாதிகளே என்றும் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒவ்வொரு காலப்பகுதியிலும் எமது மீனவர்களுக்கு பிரச்சினைகள் இல்லாததுபோல் அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள். இந்திய மீனவர்கள் 50 மீற்றருக்குட்பட்ட பகுதியினுள் வந்து மடி இழுக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

கடலிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாகக் கதைக்கும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எங்களுடன் கடலுக்கு தொழிலுக்கு வர வேண்டும்.

அதை விடுத்து நீங்கள் பட்டு மெத்தையிலும் பஞ்சணையிலும் இருந்துவிட்டு கருத்துக்களைத் தெரிவிப்பதால் மட்டுமே மீனவ சமூகம் காலாகாலமாய்ச் சொல்லெனாத் துயரப்படுவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்களுக்கு எமது கடற்பரப்பிற்குள் 3 நாட்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கிய அமைச்சர்- கொந்தளிக்கும் மீனவர்கள் SamugamMedia வல்லரசு என்ற போர்வையில் ஈழ தமிழ் மக்களை வைத்து தாயக்கட்டை காய் போன்ற அரசியல்வாதிகள் உருட்டி விளையாடும் நிலை தொடர்ந்த வண்ணமுள்ளதாக வடக்கு மாகாண கடலோடிகள் அமையத்தின் இணைப்பாளர் காத்தலிங்கம் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார்.நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.சாதாரணமாகவே இந்திய மீனவர்கள் ஈழத்தமிழர்களை இடித்து கொல்லும் அளவிற்கு செயற்பட்டுவரும் நிலையில் 3 நாட்களுக்கு இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீனவ சமூகத்தையும் அவர்களது போராட்டங்களையும் வைத்துக் குளிர்காய்கின்ற எத்தனை அரசியல்வாதிகள் இந்த அமைச்சரின் அறிவிப்பை எதிர்த்துள்ளார்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இந்நிலையை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். கடலில் மீன்வளம் இல்லாத நிலையிலேயே தான் சிறிய மீன்களை பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால் தான் சுருக்கு வலையைப் பயன்படுத்த நேரிட்டது. இந்நிலையை தோற்றுவித்தது யாரென மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.  இவ்வளவு காலமும் வட பகுதியில் சுருக்கு வலை முறை காணப்படாத நிலையில் இன்று அந்த நிலைக்கு கொண்டு வநது விட்டது எமது அரசியல்வாதிகளே என்றும் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார்.ஒவ்வொரு காலப்பகுதியிலும் எமது மீனவர்களுக்கு பிரச்சினைகள் இல்லாததுபோல் அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள். இந்திய மீனவர்கள் 50 மீற்றருக்குட்பட்ட பகுதியினுள் வந்து மடி இழுக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. கடலிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாகக் கதைக்கும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எங்களுடன் கடலுக்கு தொழிலுக்கு வர வேண்டும். அதை விடுத்து நீங்கள் பட்டு மெத்தையிலும் பஞ்சணையிலும் இருந்துவிட்டு கருத்துக்களைத் தெரிவிப்பதால் மட்டுமே மீனவ சமூகம் காலாகாலமாய்ச் சொல்லெனாத் துயரப்படுவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement