• May 07 2024

இலங்கையில் டெங்கு நோய் தீவிர நிலையில்!

Chithra / Jan 30th 2023, 10:48 am
image

Advertisement

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் வரலாறு காணாத உயர்வை பதிவுசெய்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் கடந்த சில நாட்களில் 4,387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் 32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 20,334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், டெங்கு நோயினால் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதால், நோயின் நிலையைத் தீர்மானிக்காமல் உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் டெங்கு நோய் தீவிர நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் வரலாறு காணாத உயர்வை பதிவுசெய்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இவ்வருடத்தின் கடந்த சில நாட்களில் 4,387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் 32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 20,334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன், டெங்கு நோயினால் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதால், நோயின் நிலையைத் தீர்மானிக்காமல் உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement