• May 06 2024

யாழில் திலீபனின் நினைவிடத்தில் 'வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி' காய்ச்சும் நிகழ்வு...!samugammedia

Sharmi / May 12th 2023, 1:57 pm
image

Advertisement

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முதல் மே 18 வரை தமிழர் தாயகத்தில், தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், இன்றைய நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம்  திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

முதலில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு  ஆரம்பமாகியிருந்தது.

இந் நிகழ்வில் வேலன்சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை யாழ்மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் முன்னின்று காய்ச்சி அனைவருக்கும் சிரட்டைகளில் கஞ்சி பரிமாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






யாழில் திலீபனின் நினைவிடத்தில் 'வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி' காய்ச்சும் நிகழ்வு.samugammedia முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முதல் மே 18 வரை தமிழர் தாயகத்தில், தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளன. இந்நிலையில், இன்றைய நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம்  திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. முதலில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு  ஆரம்பமாகியிருந்தது.இந் நிகழ்வில் வேலன்சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை யாழ்மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் முன்னின்று காய்ச்சி அனைவருக்கும் சிரட்டைகளில் கஞ்சி பரிமாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement